விடுதியில் இருந்து காணாமல் போன மாணவர், மூடிய கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு..

 
விடுதியில் இருந்து காணாமல் போன மாணவர், மூடிய கிணற்றிலிருந்து  சடலமாக கண்டெடுப்பு..  விடுதியில் இருந்து காணாமல் போன மாணவர், மூடிய கிணற்றிலிருந்து  சடலமாக கண்டெடுப்பு.. 

திருப்பத்தூர் அருகே அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவன், காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில்  இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 
 
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, என்பவரது மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில்  11ம் வகுப்பு படித்து வருகிறார்.  பள்ளியின் மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்த முகிலன்  கடந்த 1ம் தேதி காலை வகுப்புக்கு செல்லவில்லை எனத்தெரிகிறது.  இதனால் தொலைபேசி வாயிலாக பெற்றோரை தொடர்பு கொண்ட ஆசிரியர்கள்,  தங்களது பிள்ளை வீட்டிற்கு வந்தாரா என வினவியுள்ளனர்.  இந்தக் கேள்வியில் அதிர்ந்துபோன பெற்றோரோ, தங்களது மகன் பள்ளியில் உள்ள விடுதியில் தானே தங்கி படித்து வருகிறான், அப்படியிருக்க அவர் எப்படி வீட்டிற்கு வருவான் என கேள்வி எழுப்பியுள்ளனர். 

dead
 
அத்துடன்  கொத்தூரில் இருந்து அவசர அவசரமாக கிளம்பி பள்ளிக்கு வந்துள்ளனர்.  பள்ளியில் மகன் இல்லை , அவன் காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர்  திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் தனிப்படை  அமைத்து இரண்டு நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில், தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முகப்பு மூடப்பட்ட நிலையில் உள்ள கிணற்றில் ஒரு மாணவன் உடல் இறந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது.
 
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார்,   கிணற்றில் இருந்து உடலை வெளியே எடுத்து வந்து பார்த்தபோது,  அது காணாமல் போன மாணவன் முகிலன் என்பது தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்ட அம்மாணவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிணற்றின் மேல்பாகம் மூடப்பட்டிருந்த  நிலையில், கிணற்றுக்குள் மாணவன் சடலம் கிடந்தது எப்படி என்றும்,  மாணவனின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவரின் மர்ம மரணம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.