புதிய விளம்பரத்தில் கலக்கும் TR.. சிம்பு செய்துவைத்த நெகிழ்ச்சி அறிமுகம்..!!

 
TR Nation TR Nation

நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் புதிய விளம்பரம் ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார்.  

தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், வசன கர்த்தா என பன்முகக்கலைஞராக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். 1980ம் ஆண்டு வெளியான ஒருதலை ராகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டி.ஆர்., அதன்பிறகு வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி, உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னை காதலி  உள்ளிட்ட 19 படங்களை இயக்கியிருக்கிறார். அவர் இயக்கும் படங்கங்கள் அனைத்திற்கும்  கதை, திரைக்கதை, வசனம் எழுதிவந்த அவர், பெரும்பாலான  படங்களில் பாடல்கள் எழுதி தானே இசையமைத்தும் இருக்கிறார்.  அந்தக்காலக்கட்டத்தில் பல முன்னணி நடிகர்கள் திரைத்துறையில் இருந்தாலும்,  டி.ராஜேந்தருக்கும், அவரது படங்களுக்கு தனி கவனமும் ரசிகர் பட்டாளமும் இருந்தது.  

tr

எதுகை மோனையுடன் அவர் பேசும் வசனங்கள், கவித்துவமான வர்ணனைகள் என அவரது  பேச்சிற்கே இன்றளவிலும்  அவருக்கு ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடந்த  சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும்  அவரது குரலில் திரையுலகில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.  அந்தவகையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிக்கிடு’ பாடலில்  டி.ஆரின் குரலில் மெட்டு ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில் டி.ராஜேந்திரன் புதிய விளம்பரம் ஒன்றில் அதிரடியாக கலக்கியுள்ளார். அவரது இந்த புது அவதாரம் அனைவரையும் வியக்கச் செய்துள்ளது. தந்தை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “என் தந்தையை அறிமுகப்படுத்துகிறேன்.. ஒரு நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, பாடகராக, பாடலாசிரியர், இசையமைப்பாளராக அல்லாமல் ; ஒரு விளக்கமளிப்பவராக.” என்று குறிப்பிட்டுள்ளார்.