வரும் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி கூட்டாக பிரசாரம்!!

 
tn

வரும் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூட்டாக பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

rahul stalin

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி., அவர்களுடன் இணைந்து இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

தலைமைக் கழகம் அறிவிப்பு

tn

2024 ஏப்ரல்-19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு. ராகுல்காந்தி, எம்.பி., அவர்களுடன் இணைந்து வருகிற 12-04-2024 வெள்ளிக் கிழமை அன்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை, செட்டிபாளையம் L&T பை-பாஸ் ரோடில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.