கல்வி வள்ளலாக மாறிய வத்தல் வியாபாரி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 
tn

கல்வி வள்ளலாக மாறிய வத்தல் வியாபாரியை வாழ்த்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tn

மதுரை தத்தனேரியை சேர்ந்த 86 வயது அப்பள வியாபாரி ராஜேந்திரன் சொந்தமாக மோர் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார்.  விருதுநகரை சேர்ந்த இவர் சிறந்த தொழில் முனைவராக சாதித்துக் காட்டி உள்ளார் . இவர்  2018-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.க.மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் போன்வற்றை ரூ.1.10 கோடியில் கட்டிக் கொடுத்துள்ளார். இந்த ஆண்டு ரூ.71 லட்சத்து 45 ஆயிரத்தில் மாநகராட்சி கைலாசாபுரம் ஆரம்பப்பள்ளிக்கு நான்கு வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, கழிப்பறைகள், மாணவர் அமர்ந்து உண்ணும் இடம் போன்றவை கட்டிக் கொடுத்துள்ளார்.



இந்நிலையில் மதுரையில், பல்வேறு சமூக நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை முதலமைச்சர் ஸ்டாலின்   அழைத்து சிறப்பித்து, மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை ரூ. 1.10 கோடி செலவில் அமைத்து தந்தமைக்காகவும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை ரூ. 71.45 இலட்சம் செலவில் அமைத்து தந்தமைக்காகவும், மேலும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருவதற்காகவும் தனது வாழ்த்துகளை தெரிவித்து, சால்வை அணிவித்து, அவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை வழங்கி பாராட்டினார்.