காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்கும் சபாநாயகர் அப்பாவு - முதலமைச்சர் வாழ்த்து

 
appavu appavu

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெறவுள்ள 67ஆவது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்துகொள்ளவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை பாராட்டினார். 

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் 67ஆவது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்துகொள்ளவுள்ளார். 


இந்த நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு  அவர்களை சந்தித்து, ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெறவுள்ள 67ஆவது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ள செல்வதையொட்டி அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.