காந்தியடிகளின் 76-வது நினைவு நாள்: ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

 
tn

காந்தியடிகளின் 76 வது நினைவு நாளான இன்று, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

tn

இந்நிலையில் காந்தியடிகளின் 76-வது நினைவு நாள்: எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் அருகே வைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து காந்தியும் உலக அமைதியும் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட்டது.  



இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா என்னும் உயர்ந்த சிந்தனையைக் கட்டமைக்கத் தனது உடல் - பொருள் என அனைத்தையும் ஈந்து இந்நாட்டின் உயிராகிப் போனவர், அண்ணல் காந்தியடிகள். இந்தியச் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் போராடிய அவர், ஒரு மதவெறியனின் வன்முறைக்குப் பலியான இந்நாளில், ஒற்றுமை மிளிரும் சமூகமாகத் திகழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.