பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரது உடல்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி...

 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ரவத் உள்ளிட்ட 13 பேரது உடல்களுக்கு  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி மதுலிகா ராவத்  மற்றும்  ராணுவ உயர் அதிகாரிகள் 12 பேர் பயணித்த ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானது.

நீலகிரி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

உயர் ரக ராணுவ ஹெலிகாப்டரில்  வெலிங்க்டனுக்கு பயணம் மேற்கொண்டபோது,   குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.   இந்த கோர விபத்தில் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயரதிகாரிகள்  என 14 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

13 பேரது உடல்களும் அஞ்சலி நிகழ்வுக்காக  வெலிங்டன் சதுக்கத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.   ராணுவ பயிற்சி மையத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 13 பேரின் உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். மேலும்  வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.