பொன்முடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய முதல்வர்

 
tn

அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

Ponmudi

2006 - 2011 ம் ஆண்டு அமைச்சராக இருந்த பொன்முடி,  செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாகவும்,இதன் மூலம்  அரசுக்கு ரூ.50 கோடி வரை இழப்பு  ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் நேற்று அமைச்சர் பொன்முடியின் சென்னை மற்றும் விழுப்புரம் இல்லங்கள், அவருக்கு  தொடர்புடைய  ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அத்துடன் சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் இருந்த அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதம சிகாமணியிடம் 13 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சூழலில்  அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி ஆகியோர்  அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்து, துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அமைச்சர் பொன்முடிக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.