செம்மொழி தமிழாய்வு நிறுவன கட்டிடத்தை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
ttn

புதிதாக அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கான கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

tn

இந்திய பாரம்பரியத்தை பாதுகாக்கவும் ,செம்மொழிகளில் மேம்படுத்தவும், பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் நிறுவப்பட்டு கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டது. மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் ரூபாய் 24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் நிறுவனத்தில் விசாலமான நூலகம், மின் நூலகம், கருத்தரங்கு அரங்குகள் மற்றும் மல்டிமீடியா அரங்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

tn

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன்,  செம்மொழி நிறுவன ஆய்வு சார் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார். அத்துடன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செம்மொழி நிறுவனத்தின் புதிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டார். திருவள்ளுவர் அரங்கம் மற்றும் தொல்காப்பியர் அரங்கம், கல்விசார் பணியாளர்கள் நிர்வாகப் பிரிவு அலுவலகங்களில் முதல்வர் முக ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழ் ஆராய்ச்சி மற்றும் பதிப்புகள் தவிர இந்த கழகத்தின் பணிகளில் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களை அடையும் வகையில் செயல்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செம்மொழியின் பெருமைகளை பொது மக்கள் அறியச் செய்ய தகவல்கள் மற்றும் கருத்தரங்கங்கள் ஆகியவற்றை நடத்த முயற்சி செய்ய வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இம்மையத்தின்  பணிகளை செய்ய பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை உடன் ஆலோசனை மேற்கொண்டு செயல்பட வேண்டும் என்றும் , தமிழ் பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சித்துறை , தமிழ் விசை பலகை போன்ற மாநில அரசின் தமிழ் பிரிவுகளுடன் இயன்றவரை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் இணையக் கல்வி கழக இயக்குனர் முனைவர் ஜெயசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.