உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்..!
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்களும், கழக உடன்பிறப்புகளும், அமைச்சர் பெருமக்களும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இந்நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!. இளைஞரணி செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - துணை முதல்-அமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டி சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது, காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக,எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும். இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 27, 2025
இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி… pic.twitter.com/ikldPGsszS


