‘அதிகபிரசங்கித்தனம்’- வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பரிந்துரை

 
ச்க்ஷ் ச்க்ஷ்

சில நேரங்களில் அதிகபிரசங்கித் தனமாக வேல்முருகன் செயல்படுவது வேதனை அளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


சட்டப்பேரவையில் சீருடைப் பணியாளார் தேர்வாணையம் தொடர்பான தனது கருத்து நீக்கப்பட்டதற்கு வேல்முருகன் எதிர்ப்பு கூறிய நிலையில்,  தவாக தலைவர் வேல்முருகன் அதிகபிரசிங்கித் தனமாக நடந்து கொண்டது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தனது இடத்தைவிட்டு எழுந்து வந்து கூச்சல் போடுவது முறையல்ல எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எனவே அவர் மீது பேரவைத் தலைவர் அப்பாவு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒருமையில் பேசியது மற்றும் அமைச்சர்களை கை நீட்டி பேசியதை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைந்தார்.  சட்டப்பேரவையில் வேல்முருகன் பேசியதை ஏற்க முடியாது. அவர் தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும். இதுபோல இனிமேல் யாராவது நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் அப்பாவு  எச்சரிக்கை விடுத்துள்ளார். 


சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும், மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எந்த உச்சநீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனக் கூறியப்படி, பேச வாய்ப்பு கேட்டு அமைச்சர்கள் இருக்கையை நோக்கி முன்னோக்கி நடந்துவந்த வேல்முருகன்,கைநீட்டி பேசினார் என்பது குறிப்பிடதக்கது.