இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் - மு.க.ஸ்டாலின் அதிரடி
Mar 29, 2026, 18:48 IST1774790316177
2026 தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.
அதன்படி,
- 5,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும்.
- அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகள்
- 50 புதிய செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.
- திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மாநகராட்சிகளின் அருகாமையில் நவீன உலகத்தர வசதிகளுடன் புதிய நகரங்கள்
- அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள்
- பொள்ளாச்சியில் மொழி போராட்ட காட்சிக்கூடம்
- பல்வேறு துறைகளில் பணியாற்றும் திருநர், திருநங்கைகளுக்கு விருது வழங்கப்படும்.
- பிசி, எம்பிசி, டிஎம்சி பிரிவினர் தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடன்
- அனைட்து மாவட்டங்களிலும் உள் விளையாட்டரங்கம்
- கடலோரங்களில் மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குளம் அமைக்கப்படும்.
- வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன். இதனை பயன்படுத்தி வாஷிங்மிஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி போன்ற பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
- மீன்பிடி தடைகால சிறப்பு நிவாரண தொகை 8000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாக ஆக உயர்த்தப்படும்.மீண்டபிடி குறைவு கால் சிறப்பு நிவாரண தொகை 6 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய்.3500 ஆகவும் கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் 4500 ஆகா உயர்த்தி வழங்கப்படும்.
- உயர்க்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க நடவடிக்கை

