தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரிக்கு முதல்வர் சுற்றுப்பயணம்

 
MKstalin MKstalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 29,30,31 ஆம் தேதிகளில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

mkstalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக, வரும் 29 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடியில் புதிதாக அமைந்துள்ள டைடல் நியோ பார்கை திறந்து வைக்கிறார். தூத்துக்குடி டைடல் நியோ பார்க் கடந்த 2022-2023 ஆண்டு  அறிவிக்கப்பட்டிருந்த திட்டமாகும், இத்திட்டத்தின் கட்டுமான பணிகள் 2023 மே மாதம் துவங்கியது, சரியாக 16 மாதங்களில் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. 

 இந்த டைடல் பார்க் 30 கோடி மதிப்பீட்டில் 63,000 சதுர அடி கட்டிடப் பகுதி மற்றும் 51,000 சதுர அடி பகுதியாகவும் கட்டப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அன்று இரவு தூத்துக்குடியிலேயே தங்குகிறார். தொடர்ந்து 30-ஆம் தேதி காலை தூத்துக்குடியில் புதுமை பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்​பில், அரசுப் பள்ளி​களில் படித்து உயர்​கல்வி பயிலும் அனைத்து மாணவி​களுக்​கும் ரூ.1,000 வழங்​கப்​பட்டு வருகிறது. மேலும், 2024- 2025 ஆம் கல்வி​யாண்டு முதல் அரசு உதவி​பெறும் பள்ளி​களில் தமிழ்​வழிக் கல்வி பயின்று, உயர் கல்வி​யில் முதலா​மாண்டு, இரண்​டா​மாண்டு மற்றும் இறுதி​யாண்டு பயிலும் அனைத்து மாணவிகளுக்​கும் மாதந்​தோறும் ரூ.1,000 வழங்​கும் வகையில் இந்த திட்டம் விரிவுப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதனை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் முதலமைச்சர் கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை  திறந்து வைக்கிறார். 

Mkstalin

விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் ரூபாய் 37 கோடி செலவில் 75 மீட்டரில் பாலம் சாகர் மாலா திட்டத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 31 ஆம் தேதி காலையில் கன்னியாகுமரியில்  திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி கன்னியாகுமரியிக்  நடைபெறும் வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார், அன்று பிற்பகலே சென்னை திரும்புகிறார்.