"2000 ஆண்டுகால சண்டை இது; விட்டுக்கொடுக்க மாட்டோம்"- மு.க.ஸ்டாலின்

 
"2000 ஆண்டுகால சண்டை இது; விட்டுக்கொடுக்க மாட்டோம்"- மு.க.ஸ்டாலின் "2000 ஆண்டுகால சண்டை இது; விட்டுக்கொடுக்க மாட்டோம்"- மு.க.ஸ்டாலின்

100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு முடக்கியுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பலனை அழித்துவிட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு முடக்கியுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பலனை கொஞ்ச கொஞ்சமாக அழித்துக் கொண்டிருந்தனர். இப்போது மொத்தமாக மூடுவிழா காணப்பட்டுள்ளது, திட்டத்தை நிறுத்தினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இது வரலாற்றுத் தவறு. காந்தி பெயரை நீக்கி, புரியாத இந்தி பெயரை திட்டத்திற்கு வைத்துள்ளனர். 

தமிழரின் பண்பாட்டுக்கு பல இலக்கிய சான்றுகள் உள்ளது. தமிழ்நாட்டில் அகழாய்வு பணிகளுக்கு மத்திய பாஜக அரசு தடைபோடுகிறது. தமிழர்களுக்கு எதிரானவர்களை உறுதியோடு எதிர்த்து போராடி வருகிறோம். இல்லாத சரஸ்வதி நதி நாகரீகத்தை தேடி அலைவோருக்கு கண் முன்னே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரியவில்லை. அதற்காக நாம் விட்டு கொடுக்க முடியுமா? 2,000 ஆண்டுகால சண்டை இது, விட்டுக்கொடுக்க மாட்டோம், தோற்று போக மாட்டோம்” என்றார்.