“சில பேர் TWIST பண்ணி சொல்லிட்டு இருக்காங்க... ஆனா இதுதான் உண்மை”: மு.க.ஸ்டாலின்
Oct 16, 2024, 15:23 IST1729072439804
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் நாராயணபுரம் ஏரியை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும். வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும். சில பேர் TWIST பண்ணி சொல்லிட்டு இருக்காங்க... நாங்கள் செய்ததை மக்களிடம் சென்று கேளுங்கள். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நல்ல முறையில் கை கொடுத்திருக்கிறது
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 3 மாதமாகவே செய்து வந்தோம். வெள்ள மீட்பு பணிகளில் அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்” என்றார்.


