குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

 
MKStalin MKStalin

பதினாறு செல்வங்களை பெற்று வாழ வேண்டுமென்று இணையர்களை வாழ்த்தி குழந்தை செல்வங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை திருவான்மீயூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில்கள் சார்பில் 31 இனைகளுக்கான திருமண விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் ஆட்சி பொறுப்புக்கு வந்து அதிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இந்துசமய அறநிலையத் துறை தான். கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 276 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்து உள்ளது. 500 மூத்த குடிமக்கள் ராமேஸ்வரம் காசிக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். 

இந்து சமய அறநிலையத் துறையில் பல சாதனைகளை செய்து வருகிறது. தமிழில் குடமுழுக்கு நடத்த தீர்ப்பு பெற்று உள்ளோம், பல சாதகமான தீர்ப்புகள் வந்துள்ளது. பாம்பன் சுவாமி கோவில் வழக்கு முடித்து வைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள் என்றும் நாம் சாதனைகளை தடுக்க பல வழக்குகள்போடப்பட்டுள்ளது. அதை முறி அடித்து நாம் சாதனைகளை தொடர்ந்து கொண்டு உள்ளோம். அனைவரின் உரிமைகளை காக்கும் அரசாக நம்முடைய அரசு விளங்கி கொண்டு இருக்கிறது. திருமண தம்பதிகள் 16 செல்வங்களைப் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும். 16 செல்வங்கள் என்பது குழந்தைகள் அல்ல, மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, செல்வம் உள்ளிட்ட 16 செல்வங்களை பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும். உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள்” என்றார்.