கூட்டாட்சி என்ற சொல்லே அலர்ஜி... பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்- மு.க.ஸ்டாலின்

 
முக ஸ்டாலின்

மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் 2 ஆம் நாள் நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

Image

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2019 முதல் இணை பிரியாமல் இருக்கிறோம். இந்த கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? என்ற நப்பாசையில் சில வெளி நபர்கள் தொடர்ந்து செயல்படுகின்றனர். அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட வைக்கிறார்கள். மாநிலங்களே இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். வக்ஃப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். ஒன்றியத்தின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும்.

கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. ஒன்றிய அரசால் அதிக பாதிப்பு அடைவது நானும், கேரள முதல்வரும்தான். எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாம். மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும். அரசியல் சட்ட உரிமைகளை பறிக்கும் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதினால்தான் கூட்டாட்சி மலரும்” என்றார்.