"தமிழ்நாட்டில் 7-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி"- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியே தொடர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்ல திருமண விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் 1.30 கோடி பெண்கள் மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை பெறுகிறார்கள். இன்னும் கூட தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் முறையிட்டால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க உறுதி செய்வேன். திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லுங்கள், 2026 தேர்தல் முடிவுகள் வரும் வரை நமக்கு வேலை உள்ளது. 7வது முறையாக திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது என்ற பெருமை நமக்கு வர வேண்டும். ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு தான் நம்பர் 1 மாநிலமாக உருவாகி இருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை. எத்தனையோ சோதனைகளை தாண்டி சாதனை படைத்திருக்கிறோம். வாக்குரிமையை காப்பாற்ற திமுகவினர் சுழன்று சுழன்று பணியாற்றினோம்” என்றார்.


