“இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதற்கு காரணம் திமுக“- மு.க.ஸ்டாலின்

 
mkstalin mkstalin

கும்பகோணம் அருகே நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில மாநாடில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 1. வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற உலமாக்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் ரூ.5000 ஆக உயர்வு, 2. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கக்கூடிய 10 உருது மொழி ஆசிரியர் காலிப் பணியிடம் நிரப்பப்படும், 3. சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் வக்ஃப் வாரியம் அமைக்கப்படும், 4. உலமாக்களில் முதல்கட்டமாக 1,000 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.50 ஆயிரம் ஆக உயர்வு, 5. கல்லறைத் தோட்டம், கபரஸ்தான் தோட்டம் இல்லாத இடங்களில் அரசு நிலம் தேர்வு செய்து அமைக்கப்படும் எனக் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதற்கு காரணம் திமுக. உள்ளத்தால் உணர்வால் நாம் உடன்பிறப்புகள். இது இன்று ஏற்பட்ட நட்பு அல்ல. காலம் காலமாக உள்ள நட்பு, பயணங்களால் ஏற்படும் அலைச்சல் விட உங்கள் அன்பு மேலானது. வழிபாட்டு தலங்கள் என்பவை தொழுகைக்கான இடங்கள் மட்டுமின்றி, சமூக ஒற்றுமை, சமூக வளர்ச்சியுடன் தொடர்புடையவை. பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் அழைப்பை நான் கட்டளையாகவே ஏற்றுக்கொள்கிறேன். அவரிடம் Choice என்பதே கிடையாது. அவர் சொன்ன தேதிகளில் நிச்சயமாக வருவேன் என முன்கூட்டியே உறுதி செய்துவிடுவேன். சமூக பணியை மையமாக கொண்டு செயல்படும் மஹல்லா ஜமாஅத், இஸ்லாமிய பண்பாட்டில் முக்கியமான பங்கினை வகிக்கிறது” என்றார்.