"ஆளுநர் ஒரு தபால்காரர் மட்டுமே"- மு.க.ஸ்டாலின்
ஆளுநரின் அதிகாரம் என்பது ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், “ஆளுநருக்குரிய பதவிக்காலம் முடிந்தபிறகும் தமிழ்நாட்டில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர், பச்சையான பா.ஜ.க.காரராகவே வெளிப்படுத்திக்கொள்கிறார். அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்களால் வெறுக்கப்படுவதால், அவர் பதவியில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளை இன்னும் அதிகமாக மேற்கொண்டு, தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்வார்.
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நியமன அரசுக்குத்தான் சட்டமியற்றும் அதிகாரம் மிக்கது. பதவியான ஆளுநர் பதவி என்பது ஒரு கௌரவப் பதவிதான். சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தி- மத்திய-மாநில உறவுகளில் அதற்குரிய அதிகாரம், ஒரு என்பதைத் தொடர்ந்து தி.மு.க தபால்காரருக்குரியதுதான் சொல்லி வருகிறது. அது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.


