“உங்களுக்கு என்ன பிரச்னை? உங்களுக்கு எங்க எரியுது? திமிர அடக்கிடுவோம்”- ஆளுநரை வறுத்தெடுத்த முதல்வர்
ஆளுநர் ஆர்.என்.ரவி திமிருடன் பேசுகிறார், அவரது திமிரை அடக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் ஆர்.என்.ரவி திமிருடன் பேசுகிறார், அவரது திமிரை அடக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதால் ஆளுநருக்கு ஏன் வயிறு எரிகிறது. தமிழ் மொழிப்பற்று குறித்து எங்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம். எங்க பசங்க உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலமொழியை படிக்கிறாங்க. அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு எங்க எரியுது. ஆளுநரின் பேச்சு, தகுதியற்ற தரக்குறைவான பேச்சு. தமிழர்களை தேச விரோதிகள் என சித்தரித்து ஆளுநர் பேசுவது கண்டிக்கதக்கது. பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து பேசுகிறார். அவர் வகிக்கும் அரசியல் சாசன பதவிக்கும் துளியும் பொருத்தமற்ற தரக்குறைவான பேச்சு இது.
தமிழ்நாடு விவசாயிகளின் நெல் ஈரப்பத அளவு கோரிக்கைக்காக பிரதமரை சந்திக்கிறேன் என பழனிசாமி சொன்னால் தமிழ்நாடு அரசின் சார்பில் நானே கார் ஏற்பாடு செய்து தருகிறேன். அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல கார் தந்து அனுப்பி வைக்கிறேன். வரி வசூலிக்க மட்டும் தமிழ்நாடு. ஆனால், அவர்களுக்கு பட்டை நாமம் போடும் பாஜக. வடமாநிலங்களில் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடுனா மட்டும் கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாங்க. வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளோட போட்டி போட்டு முதலீடுகளை கொண்டு வருகிறோம்” என்றார்.
-


