“யார் வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்... களம் நம்முடையது”- மு.க.ஸ்டாலின்

 
ச் ச்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முகாம் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருட்த பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.  இக்கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சக்கரபாணி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்தூகொண்டனர். 

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர் கூட விடுபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மீண்டும் திமுக ஆட்சி அமைத்திடக்கூடாது என்பதற்காக பல்வேறு திட்டமிடல்களை பாஜக செய்துவருகிறது. எந்தவொரு தகுதி இல்லாத வாக்காளரையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துவிடக் கூடாது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்து நிறுவனங்களையும் நமக்கு எதிராக பயன்படுத்த தயாராகி கொண்டுவருகிறார்கள். யார் வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம், களம் நம்முடையது, நான் விசாரித்த வரையில் பொதுமக்களிடம் SIR குறித்த போதுமான விழிப்புண்ர்வு இல்லை. பல இடங்களில் BLO எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை என சொல்கிறார்கள். ” என அறிவுறுத்தினார்.