திறமையான 'CAPTAIN' உதயநிதி- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 
mks

தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் 5 ஆண்டுகால சாதனைகளை கொண்டாடும் விதமாக ’Champions of tamilnadu’ விழா சென்னை  ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 3% வரை வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 2021-க்கு முன்பு வரை 6 பேர் மட்டுமே இருந்த நிலையில், 2021-க்கு பிறகு 5 மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட 116 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதை பார்த்து மேலும் பல விளையாட்டு வீரர்கள் ஊக்கம் அடைவார்கள். 

கடந்த நான்கரை ஆண்டுகளில் தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்ற 5,406 வீரர்களுக்கு ரூ.177.80 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கும் இதற்கு இணையாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 241 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 29.67 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதிலும் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. அரசின் திட்டங்கள்தான் இவ்வளவு வீரர்கள் சாதிக்க உதவியது. துடிப்புடன் செயல்பட்டு தமிழ்நாட்டு இளைஞர்களையும் விளையாட்டுத் துறையையும் உதயநிதி வளர்த்துள்ளார். அதிவேகமாக முன்னேற்றியுள்ளார். சாம்பியன்களை உருவாக்கும் திறமையான கேப்டனாக அவர்  திகழ்கிறார்” என்றார்.
 

Advertisement