“திமுகவுக்கும், மீனவர்களுக்குமான உறவு கடலை போல ஆழமானது”- மு.க.ஸ்டாலின்

 
mkstalin mkstalin

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி - குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் நடைபெற்ற உலக மீனவர் நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.

mkstalin

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உங்களோடு பேசுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.உழைப்புக்கும் ,உறுதிக்கும் பெயர் பெற்ற மீனவ பெரு மக்கள் எல்லாருக்கும் என்னுடைய மீனவர் தின வாழ்த்துக்கள். கழக அரசுக்கும் மீனவர்களுக்குமான உறவு என்பது நீங்க மீன் பிடிக்க போற கடலை போல ஆழமானது... அதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்த 2023 ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வரலாற்றில் முதன் முறையாக நடத்திய மீனவர் நல மாநாடு..14 ஆயிரம் பயனாளிகளுக்கு நமது திராவிட அரசு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும்,புதிய அறிவிப்புகள் வெளியிட்டதும் உங்களுக்கு நன்கு நினைவிருக்கும். நம்முடைய எந்த கோரிக்கையும் செயல்படுத்த தயாராக இல்லாத நிலையிலும் நம் மீனவர்களுக்கு நமலாளன உதவிகளை நாம் தான் செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 7 அன்று 110 விதியின் கீழ் 576 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை மன்னார்வலை குடா பகுதியை சேர்ந்த மாணவர்களுக்காக அறிவித்தோம்.

இந்த திட்டங்களை நிறைவேற்ற திட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் குளச்சலில் துறைமுக விரிவாக்க பணிக்காக ,350 கோடி ரூபாய் நிதி வழங்க ஒன்றிய அமைச்சரை கடிதம் எழுதினேன். கடல் அரிப்பு பாதிப்புகளை தடுக்க உங்கள் கோரிக்கயை ஏற்று தூண்டில் வளைவுகள் அமைந்து வருகிறோம்.  மீன் பிடி தடைகால நிவாரண தொகையை ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து எட்டாயிரம் உயர்த்தி உள்ளோம். 60 வயதுக்கு மேல் உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என்று கூறினார்.