திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரனமான சாதனை அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.


சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா, பவள விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “55 ஆண்டுகள் உழைத்த உழைப்புக்கு கிடைத்த பதவிதான் திமுக தலைவர் பதவி. திமுகவும், தமிழ்நாடும் என் இரு கண்கள். பெரியாருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கியது பெண்கள்தான். அந்த வகையில் பெரியார் விருது பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக பவளவிழாவில் நடத்துவதை எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். என்னை தலைநிமிர்ந்து வாழவைத்த திமுகவினருக்கு தலைவணங்குகிறேன். தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை. தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை. நன்றி உணர்ச்சியில் கம்பீரமாக நிற்கிறேன்.

ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரனமான சாதனை அல்ல. இதற்கு நமது அமைப்பு முறைதான் காரணம் என்பதை நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன். இன்னும் 100 ஆண்டுகளுக்கு தி.மு.க.வின் தேவை தமிழ்நாட்டிற்கு உள்ளது. நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் ஆண்டிலும் தமிழ்நாட்டில் திமுகவே ஆட்சியில் இருக்கும். இன்னைக்கு Cream Bun-க்கு எவ்வளவு வரி போடுறீங்கன்னு கேட்கக் கூட உரிமை இல்லாத நிலைதான் உருவாகியுள்ளது. அடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும். 2026 தேர்தல்தான் நமது இலக்கு. இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. தொண்டர்கள் மீதான நம்பிக்கையில் சொல்கிறேன்” என்றார்.