“இதுதான் என்னுடைய ஆசை”- மதுரையில் நெகிழ்ச்சியுடன் பேசிய மு.க.ஸ்டாலின்

 
ச் ச்

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் TN Rising மாநாடுகளை நடத்தி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.


மதுரை முதலீட்டாளர் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் TN Rising மாநாடுகளை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டார்களின் ஒவ்வொருவரின் பங்கு அவசியம். திமுக ஆட்சியில் தென் மாவட்டங்களுக்கு வளர்ச்சியில் கவனம், மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி, மாவட்டம் தோறும் பரவலான வளர்ச்சி என நிரூபித்து காட்டியுள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்துள்ளோம். ரூ.56,766கோடியில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, தென் தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப மையமாக மதுரை மாநகரம் வளர்ந்து வருகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% முதலீடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள். நாம் வளர்ச்சி அரசியலை பேசினால் அவர்கள் வேறு அரசியலை பேசுகின்றனர். நான் உறுதியாக சொல்கிறேன். அவர்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், அவற்றை முறியடிப்போம். சிதைப்போம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கிட்ட அந்த பாட்சா எல்லாம் பலிக்காது. எதுவும் எடுபடாது

மாநிலத்தில் பல்வேறு விவகாரங்களை ஆய்வுசெய்த பின்னரே முதலீடு செய்வது குறித்து முடிவு செய்வர். தூங்கா நகரம் என்று சொல்வதைவிட, மதுரையை எப்போதும் விழிப்புடன் இருக்கும் மண் என்றுதான் கூற வேண்டும். கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ் பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. தொழில் தொடங்க சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட வலிமையான நகரம் மதுரை. இந்திய நாட்டின் வரலாற்றை எழுத வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கவேண்டும். வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடுதான் முதலீட்டாளர்களின் முகவரி என்பதை உறுதி செய்தோம். போடப்பட்ட ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்குள் வர வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளோம்” என்றார்.