"பொடனியில் அடிச்சு விரட்டி அடிப்பாங்க"- மு.க.ஸ்டாலின்

 
s s

திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக  எங்கு, எப்போது தீபம் ஏற்றப்பட வேண்டுமோ, இந்த ஆண்டும் சரியாக, முறையாக அந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மதுரை மக்களிடம் வளர்ச்சி என்றால் ‘வாங்க வாங்க’ என்று வரவேற்பாங்க... அதுவே வன்முறையை தூண்டக் கூப்பிட்டால் பொடனியில் அடிச்சி விரட்டி அடிப்பாங்க... அனைத்து மதத்தினரும் அங்காளி, பங்காளியாக பாசத்துடன் பழகும் மதுரை மண்ணில் இருந்து சொல்கிறேன். தமிழ்நாட்டில் என்றைக்கும் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம்தான் ஒளிரும். அமைதியின் பக்கம் நிற்கும் மதுரை மக்களுக்கு நன்றி, பாராட்டுகள். ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண் இது

திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக  எங்கு, எப்போது தீபம் ஏற்றப்பட வேண்டுமோ, இந்த ஆண்டும் சரியாக, முறையாக அந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது . திருப்பரங்குன்றம் விஷயத்தில் சிலர் அரசியல் லாபங்களுக்காக துண்டாட சதி செய்கின்றனர். வளர்ச்சி திட்டங்களை சகித்து கொள்ள முடியாமல் சிலர் இவ்வாறு செயல்படுகின்றனர். மதுரை மக்களுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியும். எப்படி பந்து போட்டாலும் சிக்ஸர் அடிப்போம்” என்றார்.