பத்திரிகையாளர்களுக்கு சம்மன் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

 
s s

மூத்த பத்திரிக்கையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த்துக்கு அசாம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

படம்


மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்த சில நாட்களின் மூத்த பத்திரிக்கையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த்துக்கு அசாம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். FIR நகல் எதுவும் இல்லாமல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இருவரும் கைது செய்யப்படும் அச்சுறுத்தல் உள்ளது.


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மூத்த பத்திரிகையாளர்களுக்கு சம்மன் அனுப்பிய அசாம் காவல்துறையின் நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆரின் நகல் மற்றும் வழக்கின் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை, ஆகையால் இருவரும் கைது செய்யப்படும் அச்சுறுத்தல் உள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை முடக்க தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கேள்விகள் கேட்பது தேசத்துரோகமாகக் கருதப்பட்டால் ஒரு ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.