பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது சென்னை சங்கமம்!

 
ச் ச்

"சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா"-வை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Image


சென்னையில் தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் திருவிழாவின் போது "சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா" என்ற மாபெரும் கலைவிழா கடந்த கலை நிகழ்ச்சிகள் நான்கு ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் கலைநிகழ்ச்சிகள் இன்று எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை அடுத்து, 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 20 இடங்களில் ஜனவரி 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.

Image

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், “பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது #ChennaiSangamam2026 நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் சென்னை சங்கமம் கலைவிழாவுடன் இந்தப் பொங்கலைக் கொண்டாடுவோம்!உண்மையான அக்கறையோடும் உயர்வான நோக்கோடும் ஒவ்வொரு ஆண்டும் இதனை மேலும் மேலும் சிறப்பாக ஒருங்கிணைத்து வரும் தங்கை கனிமொழி அவர்களுக்குப் பாராட்டுகள்! இந்த ஆண்டு பாடலாசிரியராகவும் களமிறங்கியதற்காக இந்த அண்ணனின் special வாழ்த்துகள்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.