முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்- மு.க.ஸ்டாலின்
பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக பெய்த மழை சென்னையை புரட்டிப்போட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை இரவு தொடங்கி நேற்று இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று மழை நீர் தேங்கியது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததுடன், ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்தன. இவை அனைத்தும் மாநகராட்சி ஊழியர்களால் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று முதலமைச்சர், அமைச்சர்கள், மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

கனமழை குறித்த ‘அலெர்ட்’ பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம்.
— M.K.Stalin (@mkstalin) October 16, 2024
பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது.
முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்!… pic.twitter.com/cVeH3QbkqT
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கனமழை குறித்த ‘அலெர்ட்’ பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம். பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கள ஆய்வில் ஈடுபடும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.


