தொடர்மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா உழவர்களைக் காப்போம்- மு.க.ஸ்டாலின்

 
mkstalin mkstalin

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா உழவர்களைக் காப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “டிட்வா புயலால் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்! அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான #NorthEastMonsoon கனமழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் & வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியில் (SDRF) இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.


வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளைத் தொடர்ந்து நேரடியாகக் கண்காணித்து வருகிறேன். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும், மக்களைக் காக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.