“ஜெர்மனி, UK போறேன்... நம்பர் 1 தமிழ்நாடு என்ற இலக்குக்கு இந்த பயணங்கள் பாதை அமைக்கும்”- மு.க.ஸ்டாலின்

 
ச் ச்

முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு, 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து இன்று காலை 9 மணிக்கு ஜெர்மனிக்கு பயணம் செய்த முதல்வருடன், அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் சென்றனர். 


இப்பயணம் குறித்து ட்விட்டரில் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “Off to Germany and the United Kingdom, carrying all your wishes and love with me. U.A.E., ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், U.S.A. ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் அளித்த வெற்றியின் ஊக்கத்தோடு, அந்தப் பயணங்களால் பெறப்பட்ட முதலீடுகள் தரும் நம்பிக்கையோடு ஜெர்மனி & இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணமாகிறேன்... இதுவும் Hit அடிக்கும்! நம்பர் 1 தமிழ்நாடு என்ற இலக்குக்கு இந்தப் பயணங்கள் பாதை அமைக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.