‘மக்கள் பவன்’- பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை: மு.க.ஸ்டாலின்

 
MK stalin MK stalin

'ராஜ் பவன்' இனி 'லோக் பவன்' என்றழைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில் பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களில் உள்ள ராஜ் பவன்கள் இனி மக்கள் பவன் என்று அழைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2024 ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த, அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது.


இதுதொடர்பான செய்தியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை!சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை! சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.