மதுரை மழை பாதிப்புகள்- ரூ.11.90 கோடி செய்து உத்தரவிட்டேன்: மு.க.ஸ்டாலின்

 
mkstalin

மதுரை மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.


மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக மதுரை சுற்றியுள்ள கண்மாய்கள் முழுமையாக நிரம்பி அதிலிருந்து தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீர் கனமழையினால் தண்ணீர் அதிக அளவில் அதிகரித்தது அந்த தண்ணீர் முழுவதுமாக கடைமடையில் உள்ள செல்லூர் கண்மாய்க்கு வந்த பின்பு அங்கிருந்து வைகை ஆற்றில் பந்தல்குடி கால்வாய் வழியாக வைகை ஆற்றுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிகளவில் தண்ணீர் வந்ததால் பந்தல்குடி கால்வாய் தன்னுடைய முழுமையான கொள்ளளவு தாண்டி தண்ணீர் வந்ததால் செல்லூரில் பல பகுதிகளில் தண்ணீரில் முழ்கியத. கட்டபொம்மன் நகர், சத்தியமூர்த்தி தெரு, செல்லூர் ஐம்பது அடி சாலை என பல இடங்களில் தண்ணீர் இடுப்பளவுக்கு வந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் மதுரை மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “மதுரை மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சிஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினேன். அப்போது, செல்லூர் பகுதியில் கூடுதல் கால்வாய் அமைக்க வேண்டியதன் தேவை குறித்து எடுத்துக் கூறினர். உடனடியாக, 11 கோடியே 90 இலட்சம் ரூபாயை அதற்காக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு நிரந்தரத் தீர்வு காண அறிவுறுத்தியுள்ளேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.