குஜராத் விமான விபத்து அதிர்ச்சி அளிக்கிறது - மு.க.ஸ்டாலின்

 
MK stalin letter MK stalin letter

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Image


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 குழந்தைகள் உட்பட  242 பேர் உடல் கருகி பலியாகின. விமானம் புறப்பட்ட 3 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. 3,000 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்துக்குள்ளான பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து இதுவரை சுமார் 50 சடலங்கள் மீட்கப்பட்டன. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 169 பேர் இந்தியர்களாவர். ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது. 


இந்நிலையில் விமான விபத்துக்கு இரங்கல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள், அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.