"பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது"- மு.க.ஸ்டாலின்

 
MK stalin letter MK stalin letter

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்  என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்புவழங்கியது. 

nn


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகளிர் நீதிமன்றம், அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. 


இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.