இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிரை காத்த ஓட்டுநருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த திரு. மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த மலையப்பனுக்கு பள்ளி வாகனம் ஒட்டும்போது நெஞ்சுவலி ஏற்பட்டது. மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டீரிங்கில் மயங்கி சரிந்த மலையப்பன், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மலையப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட சூழலி வேனை, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த திரு. மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) July 25, 2024
அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்! https://t.co/TLSZfV6Vez
இந்நிலையில் மலையப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த திரு. மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.