தம் உழைப்பினால் உலகைச் சுழல வைக்கும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள்- மு.க.ஸ்டாலின்

 
MKstalin MKstalin

தம் உழைப்பினால் உலகைச் சுழல வைக்கும் தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் உலக உழைப்பாளர் நாள் வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

mkstalin


இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தம் உழைப்பினால் உலகைச் சுழல வைக்கும் தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் உலக உழைப்பாளர் நாள் வாழ்த்துகள். போராடிப் பெற்ற ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் நினைவுகூர்ந்து, முன்செல்ல #MayDay-வில் உறுதியேற்போம்! இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும். அதுதான் எங்கள் கொள்கை, இலக்கு! தீட்டும் ஒவ்வொரு திட்டத்திலும் அந்த இலட்சியத்தைத்தான் வெளிப்படுத்துகிறோம். இது சாமானியர்களுக்காகச் சாமானியர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஆட்சி. என்றும் உங்களுடன், உங்களில் ஒருவனாக நிற்போம்! #InternationalWorkersDay #LabourDay” எனக் குறிப்பிட்டுள்ளார்.