மு.க.ஸ்டாலினின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் - 800 பேருக்கு சம்மன்

 
tn

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்திய 800 பேருக்கு  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

stalin

தமிழக மின்வாரிய காலி பணியிடங்களுக்கு உரிய தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவ்வப்போது நிரப்பப்பட்டு வரும் நிலையில் மின்வாரியத்தில் கேங்மேன் எனப்படும் களப்பணியாளர்கள் பணியிடத்திற்கு எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் 15000 பேர் பங்கேற்ற நிலையில் 5400 பேருக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. இந்த கோரிக்கையை முன்வைத்து நேற்று முன்தினம் சென்னை கொளத்தூரில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.  800-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்று சேர்ந்து அலுவலகத்தை முற்றுகையிட்டதால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

th

இந்நிலையில் சென்னை, கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 800 பேருக்கும் பெரவள்ளூர் போலீசார் சம்மன் அனுப்பினர். ஒப்பந்த மின்சார கேங்மேன் தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.