நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : 6 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம.தலைவர் கமல்ஹாசன்..

 
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் – கமல்ஹாசன் மகிழ்ச்சி!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் பிப். 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.  அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை , வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது என உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தல்

அந்தவகையில் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்பகனவே 5 - கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று 6வது பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.  அதன்படி சென்னை, ஆவடி, காஞ்சிபுரம், திருச்சி, திருப்பூர், சேலம், மதுரை மாநகராட்சிகளிலும், திருவண்ணாமலை, திருக்கோவிலு,,பொள்ளாச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் பேருராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் உங்களுள் ஒருவர் என்பதும் உங்களுக்கான ஒருவர் என்பதும் இவர்களின் தனித்தகுதிகள். தகுதி மிக்க இவர்களை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை.” என்று குறிப்பிட்டுள்ளார்.