நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்போன் எடுத்துச் செல்ல தடை

 
vijay awards

நடிகர் விஜய் தலைமையில் நடைபெறும் கல்வி விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் 12ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை  சந்திக்க இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். அதன்படி இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார் நடிகர் விஜய். அதன்படி முதல் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கப்படுகிறது. விழாவிற்கு வருகை தந்துள்ள மாணார்கள் மற்றும் பெற்றோர்களூக்கு காலை, மதிய உணவு மற்றும் வெளியூரில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்குவதற்கான மண்டப செலவு அனைத்தையும் விஜய் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தலைமையில் நடைபெறும் கல்வி விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையற்ற சர்ச்சை பதிவுகள் மற்றும் விவாதங்களை தவிர்ப்பதற்காக செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.