இந்த 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யுமாம்!!

 
rain

அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain


தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி  காரணமாக,இன்று  செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ,வேலூர் ,திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ,விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

rain

நாளை முதல் வருகிற 23ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகம் மூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில்  இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Rain

இந்நிலையில் தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ,ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ,கரூர் மற்றும் நாகையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.