8 மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்பு தளங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 
mk stalin

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்பு தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணிலி வாயிலாக திறந்து வைத்தார். 

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ரூ.105.08 கோடி மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூறையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நெல் சேமிப்புத் தளங்களை காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.  106 நவீன நெல் சேமிப்புத் தளங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

இதேபோல் புதிய வட்ட செயல்முறை கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.