அடுத்த மாதம் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்

 
modi

ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார். 

Sleeker, swifter, with revolving seats — Modi flags off Gandhinagar-Mumbai Vande  Bharat Express

ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. அப்போது சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் தாம்பரம்- செங்கோட்டை ரயில், திருத்துறைபூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையிலான ரயில் சேவைகளையும் அவர் தொடங்கிவைக்கிறார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடத்தை திறந்துவைக்க பிரதமர் மோடி மார்ச் 27 ஆம் தேதி சென்னை வருவதாக இருந்தது.

இந்தியா முழுவதும் 12 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்படு வதாகவும், விரைவில் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்க திட்டமிட்டு வருவதாகவும் ரயில்வே துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் தெரிவித்துள்ளார்.