எதிர்க்கட்சிகளின் கட்டுக்கதைகளை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள் - வானதி ஸ்ரீனிவாசன் எம்எல்ஏ

 
vanathi srinivasan

சமையல் எரிவாயு இணைப்பு 33 கோடியாக உயர்த்தி மோடி அரசு பெரும் சாதனை என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமயில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி சிலிண்டர் 900 ரூபாய்க்கு கிடைக்கும்.பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான, 'உஜ்வாலா' திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டரின் விலை 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இனி 700 ரூபாய்க்கு சிலிண்டர் பெற முடியும்.இதனால் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரடியாக பயன் பெறுவார்கள். இதற்காக பிரதமர் மோடிக்கு எனது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் நேரடி பலனைக் கொடுக்கும் சமையல் எரிவாயு விலை குறைப்பை எதிர்க்கட்சிகள் வழக்கம் போல, விமர்சனம் செய்து வருகின்றன. அவர்களது அறிக்கை, பேச்சு, பேட்டிகளிலும்,ப்சமூக ஊடகப் பதிவுகளில், மக்களுக்கு பயன் கிடைத்து விட்டதே, பிரதமர் மோடி அரசுக்கு குறையாமல் இருக்கும் மக்கள் ஆதரவு மேலும் அதிகரித்து விடுமே என்கிற அச்சமும், பதற்றமும் தெரிகிறது. 

cylinder

எதிர்க்கட்சித் தலைவர்களின் அறிக்கைகளில், 2014-ல் காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியை விட்டு வெளியேறும் போது, சமையல் எரிவாயு விலை  குறைவாக இருந்தது போலவும், பாஜக ஆட்சியில் தான் அது அதிகரித்தது போலவும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால், உண்மை அதற்கு நேர் மாறானது. 2014-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில், 14.2 கிலோ எடை கொண்ட, சமையல் எரிவாயு விலை சிலிண்டரின் விலை சென்னையில் 1,234 ரூபாயாக இருந்தது. கொல்கத்தாவில் 1,270 ரூபாயாக  இருந்தது. பாஜக ஆட்சியில் 2023 மார்ச் 1-ம் தேதி 1,118 ரூபாய் 50 பைசாவாக இருந்தது. 2020 மே 1- ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் 569 ரூபாய் 50 பைசா ஆக இருந்தது. அதாவது 2014-ல் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்ததை விட, கிட்டத்தட்ட பாதி விலைக்கு விற்கப்பட்டது.

vanathi srinivasan

ஒன்பது ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2014-ல் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தது விட குறைவாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு இதைவிட நற்சான்று இருக்க முடியாது. இந்த புள்ளிவிவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் https://iocl.com/indane-14Kg-nonsubsid-previous-price இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். 2014-ம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தபோது, 14 கோடியே 50 லட்சம் மக்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருந்தனர். பாஜக ஆட்சியில் அந்த எண்ணிக்கை 33 கோடியாக உயர்ந்துள்ளது. அதில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாய் இணைப்பு பெற்றவர்கள் 9 கோடியே 60 லட்சம் பேர். சமையல் எரிபாய் விலையை சிலிண்டருக்கு 200 ரூபாயும், உஜ்வாலா இணைப்பு பெற்றவர்களுக்கு 400 ரூபாயும் குறைத்தது சாதனை என்றால் அதைவிட பெரும் சாதனை, 14.50 கோடி இணைப்புகளை 33 கோடியாக உயர்த்தியது. இந்த உண்மைகளை எல்லாம், இவற்றை நேரடியாக அனுபவித்து வரும் பொதுமக்கள் நன்கறிவார்கள். அதனால்தான், எதிர்க்கட்சிகளின் கட்டுக்கதைகளை நம்பாமல், தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினார்கள். மூன்றாவது முறையும் ஆட்சியில் அமர்த்த இருக்கிறார்கள்.என்று குறிப்பிட்டுள்ளார்.