“மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! பெண் சக்தியின் வெளிப்பாடு”- பிரதமர் மோடி

 
ச்

ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். 

Jayalalithaa to meet PM Modi in capital today, key issues to be discussed |  Oneindia News

பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், மனதில் இருந்து ஒரு குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா. நான் தமிழ்நாட்டிற்கு எப்பொழுது சென்றாலும் அந்த மாநில மக்கள் ஜெயலலிதா மீது எந்த அளவிற்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்கிறேன். பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா அவர்கள் இருந்தார். அந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அவரது தேசபக்தி மிகப்பெரியது. அவருடனான எனது நினைவுகள் இன்னமும் பசுமரத்தாணி போல இருக்கிறது. என்னுடைய முதல்வர் பதவியேற்பு விழா நடந்த பொழுதெல்லாம் அவர் நேரில் வந்து கலந்து கொண்டார். 

மக்களுக்காக வாழ்ந்தவர்கள் அவர்களி்ன் மனதில் என்றேன்றும் இருப்பார்கள் என்பதற்கு உதயாரணம் ஜெயலலிதா.  ஜெயலலிதாவின் பெயரை சொல்லும்போதே மக்களின் முகத்தில் பிரகாசம் வருகிறது. ஜெயலலிதாவின் சிந்தனை மிகவும் தெளிவானது. நிர்வாகத்தை திறமையாக கையாள்வது குறித்து நாங்கள் அடிக்கடி ஆலோசித்துள்ளோம்” என்றார்.