#BREAKING பணம் பட்டுவாடா புகார்- ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் சோதனை

 
ச்

பணம் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் மூன்று பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பணம் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். டி.குன்னத்தூர் இல்லத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தி பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் எழுந்த புகாரில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. சோதனையில் எதுவும் சிக்காததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.