விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 20க்கும் மேற்பட்டோர் காயம்!!
Sep 18, 2023, 08:36 IST1695006367747
விருத்தாசலம் அருகே, அரசுப் பேருந்து விபத்தில் சிக்கியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் அருகே, சேலத்தில் இருந்து நெய்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.