குரூப் 4 பணியிடங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நிரப்ப வேண்டும் - முத்தரசன் கோரிக்கை..

 
mutharasan

தேர்வாணையம் குரூப் 4 பணியிடத்திற்கு
20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து மாநில செயலாளர்  முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கோவிட் நோய்த்தொற்று காரணமாக மூன்று ஆண்டுகள் தேர்வு நடத்தவில்லை. கடந்த ஆண்டு தான் நான்காம் நிலை பணியாளர் தேர்வுக்கான தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதியுள்ளனர்.தேர்வு எழுதியவர்களில் 10 ஆயிரத்து 117 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்க இயலாது. லட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டதால் அரசின் சேவை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேறவில்லை என்பதை அரசு கருதி பார்க்க வேண்டும்.

tnpsc

இந்த முறையில் நான்காம் நிலை (குரூப் 4) தேர்வு எழுதியுள்ளவர்களில் 20 ஆயிரத்துக்கும் குறையாத எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட வேண்டும் நடப்பாண்டிலேயே கலந்தாய்வு நடத்தி பணிநியமனம் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தேர்வாணையத்தையும், அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.