சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!

 
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை எதிர்த்து மனு!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.  இதன் காரணமாக சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் சென்னை முழுவதும் நாளை  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின பேருரை ஆற்றுகிறார்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.  இதன் காரணமாக   புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதி முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்துமுனையங்கள் , வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் இதர இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து, தமிழக காவல்துறையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் 814 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் சென்னை எழும்பூர் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 100 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அனைத்து ரயில் நிலையங்களிலும் வெடிகுண்டு கண்டறியும் உபகரணங்கள் மற்றும் மோப்ப நாய்களை பயன்படுத்தி தீவிர சோதனை நடத்தப்படுகிறது.